» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் சங்கம் 19வது ஆண்டு விழா

வியாழன் 28, செப்டம்பர் 2023 3:45:53 PM (IST)



தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்க 19வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. 

நலச்சங்கத் தலைவர்  சி.தங்கராஜா தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக புலவர் பே.சங்கரலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்  சுப்புலட்சுமி பொன்ராஜ், நலச்சங்க நிறுவனர் மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

விழாவில், பள்ளி, கல்லூரி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக முருக லெட்சுமி நன்றி கூறினார். 

இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் துணைச் செயலாளர் நாகராஜ் வரவேற்றார். செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆய்வு அறிக்கையை வாசித்தார். சண்முகசுந்தரம்  வரவு - செலவு அறிக்கையை வாசித்தார் சிதங்கராஜா நலச்சங்க தலைமை உரை ஆற்றி தீர்மானங்களை வாசித்தார். துணைத்தலைவராக சண்முகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கூட்டத்தில் புரவலர்கள் ராமமூர்த்தி, மாரிமுத்து செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்சன், சிவசுப்ரமணியன், சொக்கலிங்கம், செல்வகுமார், செந்தில்குமார் பொன்ராஜ், சண்முகசுந்தரம், ஸ்ரீதரன்  வத்சலாதேவி, அமுதா, வடிவு ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவாக தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து

JJSingh, DohaSep 29, 2023 - 08:56:22 AM | Posted IP 172.7*****

Happy to see Prof. C. Thangaraj. Congratulations to all.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory