» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதமாற்றம் விவகாரத்தால் மீனவர்கள் மோதல்: 200 நாட்டுப் படகுகள் வேலை நிறுத்தம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 10:39:44 AM (IST)
காயல்பட்டினத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 200 நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் கொம்புதுறை கடற்கரையில் இருந்து 200 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்த மதத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2பேர் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்களாம். இதையடுத்து அவர்கள் 2பேருக்கும் மீன்களை ஏலமிட தடை விதித்தாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதையடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டி 200 நாட்டுப் படகுகள் கொம்புதுறை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஆறுமுகநேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










