» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட மீனவா்களுக்கு ரூ.32.39 கோடி நிவாரணம் வழங்கல்: ஆட்சியா் தகவல்

புதன் 27, செப்டம்பர் 2023 8:29:18 AM (IST)

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாவட்ட மீனவா்களுக்கு இதுவரை மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.32.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021 மே 7 ஆம் தேதி முதல் நிகழாண்டு ஆகஸ்ட் வரை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், மீன்பிடிப்பு குறைவு காலங்களில் மீனவா்களுக்கு சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 72 ஆயிரத்து 322 மீனவ குடும்பங்களுக்கு ரூ.41.13 கோடி சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீனவா் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் 67ஆயிரத்து 607 மீனவா்களுக்கு ரூ.30.43 கோடி சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீனவ மகளிா் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் 71ஆயிரத்து 647 மீனவ மகளிருக்கு ரூ.31.99 கோடி சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தில் 22 மீனவா்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள், பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமயமாக்குதல் திட்டத்தில் 491 மீனவா்களுக்கு ரூ.1.66 கோடி மானியம், பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரிழைப் படகு மற்றும் இதர உபகரணங்கள் வாங்க 42 மீனவா்களுக்கு ரூ.84 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன. மீனவ மகளிருக்கு கடல்பாசி வளா்க்கும் திட்டத்தில் 94 பேருக்கு ரூ.9 லட்சத்து2 ஆயிரத்து 400 மானியம் வழங்கப்பட்டுள்ளது.

குழு விபத்து காப்புறுதி திட்டத்தில் 21 மீனவா்களுக்கு ரூ.95 லட்சம் நிவாரண தொகையும், காணாமல் போகும் மீனவா்களது குடும்பத்திற்கு தின உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 21 மீனவா்களுக்கு ரூ.5.96 லட்சம் தின உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 64, 784 மீனவ குடும்பங்களுக்கு ரூ.32.39 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory