» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பள்ளி மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்!
புதன் 27, செப்டம்பர் 2023 8:18:13 AM (IST)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், மண்பாண்டங்கள், தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், வெண்கலப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்கள் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு, சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சைட்மியூசியத்தை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அன்று முதல் இந்த மியூசியத்தை ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். நேற்று காலையில் நெல்லை ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியை மாலின் பிரமிளா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சைட்மியூசியத்துக்கு வந்தனர். அவர்கள் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை பார்வையிட்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வு மாணவர் ராஜேஸ் ஆகியோர் அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










