» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறித்தவர் கைது!
புதன் 27, செப்டம்பர் 2023 8:16:22 AM (IST)
கோவில்பட்டியில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த பாண்டவர் மங்கலம் சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த செந்தில்ராஜ் மனைவி சண்முகத்தாய் (56). இவர் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பகலில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பிஸ்கட் கேட்டுள்ளார்.
அப்போது கடையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை சண்முகத்தாய் எடுத்து கொண்டிருந்த போது, திடீரென்று கடைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சண்முகத்தாய் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், ராமநாதபுரம் மாவட்டம் முத்துராமலிங்கபுரம், பாப்பு ரெட்டியபட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் கோவிந்தசாமி (41) என்பவர், சண்முகத்தாயிடம் சங்கிலியை பறித்து சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மேற்கு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து வழப்பறி செய்த தங்க சங்கிலியை போலீசார் மீட்டனர். மேலும் அவர் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










