» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் நாளை 50% கட்டணம் வசூலிக்க உத்தரவு!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 9:28:14 PM (IST)

தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடியில் நாளை  (27ம் தேதி) 50 சதவீத சுங்க கட்டணம் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், தென் மாவட்டத்தில் மதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் நான்குவழி சாலையாக தேசிய நெடுஞ்சாலை NH 38 அமைந்துள்ளது.

இந்த சாலை தூத்துக்குடி – மதுரை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியில் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், வாகைகுளத்தில் உள்ள டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முறையாக இந்த சாலை பராமரிக்கப்படுவதில்லை.

அதாவது, 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது? சாலை பணிகள் முழுமையடையாத போது சுங்கச்சாவடி வசூல் பணிகள் ஏன் துவங்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பதில் தாக்கல் செய்யும் காலம் வரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். வாகைகுளம் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு நாளாவது 50% கட்டண வசூல் செய்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது!

சுங்க சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் அப்பொழுது தான் இடைக்கால தடை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை (27ம் தேதி) காலை 8 மணி முதல் 28ம் தேதி காலை 8 மணி வரை 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து

KARNARAJ RAMANATHANSep 27, 2023 - 08:37:52 PM | Posted IP 162.1*****

Too much drama in this matter. why only one day 50%.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory