» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5921 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு: எஸ்.பி., பாராட்டு!

வெள்ளி 15, செப்டம்பர் 2023 8:30:56 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5921 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசும்பொன்நகர் பகுதியில் 22 மின்கம்பங்கள், நீர்தேக்க தொட்டி 1, பொதுசுவர் 9, பாலம் 1 என 33 இடங்களிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூச்சிக்காடு, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாந்துறைவிளை, 

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெட்சுமிபுரம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 37 மின்கம்பங்களிலும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்புளியங்குடி பகுதியில் மின்கம்பங்கள் 5, பொதுசுவர் 2, பாலம் 1 என 8 இடங்களிலும்,

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துவாய்பட்டி, குமாரகிரிபுதூர் ஆகிய பகுதிகளில் 34 மின்கம்பங்கள், நீர்தேக்க தொட்டி 2, தெருக்குழாய் 1 என 37 இடங்கள் உட்பட இன்று ஒரே நாளில் மொத்தம் 115 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.

இதுவரை மொத்தம் 5921 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.  இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

TN69Sep 15, 2023 - 08:45:38 PM | Posted IP 172.7*****

மாப்ளே தல சீவுற சீப்பு தூக்கிட்டா கல்யாணம் நின்றுமில்ல, சீப்பு வச்சே ப்ளானை ச்சீப்பா முடிச்ச மாதிரி இருக்கே. உங்களின் சாதி அழிப்பு திட்டம்???????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory