» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 14, செப்டம்பர் 2023 3:12:16 PM (IST)

கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா வ.உ. சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. கோவில்பட்டி ஜே.சி.ஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார். நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா வரவேற்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜையா ஆகியோருக்கு ஜே.சி.ஐ மண்டல தலைவர் மினி பிரியா ராஜேந்திரன் கலந்துகொண்டு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் மண்டல துணைத் தலைவர் ராஜிதப்நெஸ்தார், ஜே.சி.ஐ உறுப்பினர் ஸ்டீபன் நரேஷ், பள்ளி ஆசிரியர்கள், ஜே.சி.ஐ நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

Sharmila SubramaniSep 16, 2023 - 12:00:15 PM | Posted IP 172.7*****