» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி, திருச்செந்தூர் ரயில்கள் நேரம் மாற்றம் : ஆக.14 முதல் அமல்
வியாழன் 27, ஜூலை 2023 7:56:03 AM (IST)
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லும் சில ரயில்களின் நேரம் ஆகஸ்டு 14-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சிறப்பு பயணிகள் ரயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 7.20-மணிக்கு பதிலாக, இரவு 8.25-மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
இதே போன்று திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரயில் காலை 8.25-மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு நெல்லையை வந்தடைந்தது. இந்த ரயில் தற்போது காலை 8.15-மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் 10 மணிக்கு நெல்லையை வந்தடையும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் இருந்து 8.10-மணிக்கு புறப்பட்டு 2.40-க்கு திருச்சியை சென்றடைந்தது. இந்த ரயில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு 2.40 மணிக்கு திருச்சியை சென்றடையும் வகையில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இந்த தகவல் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
Jaleesur RahmanJul 31, 2023 - 01:35:26 AM | Posted IP 172.7*****
Guruvayur Thoothukudi link express
SureshJul 29, 2023 - 08:18:52 AM | Posted IP 172.7*****
தெற்கேயிருந்தும் வடக்கேயிருந்தும் மணியாச்சியை கடந்து செல்லும் அனைத்து விரைவு ரயில்களும விசாகபட்டினம் போல தூத்துக்குடி வந்து செல்ல ஏற்பாடு செய்யலாம்.
கார்த்திக்Jul 28, 2023 - 09:36:30 PM | Posted IP 172.7*****
கொரோனாவிற்கு முன்பு வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் எவ்வளவு ரயில்கள் நின்று செல்லும் என பொதுமக்களுக்கே தெரியும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்களை தவிர மற்ற அனைத்து ரயில்களும் நின்று தான் சென்றன. கொரோனாவிற்கு பின்னர் உருப்படியாக எந்த ரயிலும் இல்லை. அதிகாலையில் திருநெல்வேலி செல்ல ஒரு ரயில் கூட நின்று செல்வதில்லை , அனந்தபுரி, செந்தூர், என் இரு ரயில்களில் ஒன்றாவது நின்று சென்றால் நல்லது தேவையில்லாத நேரத்தில் ( சாயங்காலம்)தான் 4/5 ரயில்கள் திருநெல்வேலிக்கு செல்கின்றன. காலையில் ஒன்று கூட இல்லை. என்னவோ நீங்களும் உங்க அரசாங்கமும் .
NameJul 28, 2023 - 07:16:44 PM | Posted IP 172.7*****
Mla irukanga mp irukanga ministerum irukanga ana train innum varalaye
BalamuruganJul 28, 2023 - 02:17:12 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடிக்காக ஏதாவது புதிய ரயில் பெற்று தந்துள்ளாரா அல்லது கோரிக்கையாவது வைத்துள்ளாரா இந்த ஐந்தாண்டு MP காலத்தில் , பிரஷ் கொஞ்சமாவது கேள்விய கேட்டு கடமையாற்றுங்கள்.
PREMKUMAR SankaranJul 28, 2023 - 01:16:05 PM | Posted IP 172.7*****
Thoothukudi needs not at all addressed and bothered.only single digit number train services!
பெ.ராமர் AIBDPA தூத்துக்குடிJul 28, 2023 - 08:36:57 AM | Posted IP 172.7*****
🤔 பாலருவி விரைவு வண்டி வருகிறது என்றார்கள்
மேட்டுபாளையம் தூத்துக்குடி விரைவு வண்டி வருகிறது என்றார்கள் ????😫😫😫 எல்லாம் கானல் நீராக உள்ளது.....😂😂
தாம்பரம் செங்கோட்டை விரைவு வண்டி டெல்லி கன்னியாக்குமரி விரைவு வண்டி
மணியாச்சி கோவில்பட்டி எதாவது ஒரு இடத்தில் நின்றால் இந்த மாவட்ட மக்களுக்கு பயன்கிடைக்கும். மக்கள் பிரதிநிதிகள் விமானத்தில் பறப்பதால் அவர்களும் கேட்பதில்லை !!
பெ. ராமர் AIBDPA தூத்துக்குடி.Jul 28, 2023 - 08:29:46 AM | Posted IP 172.7*****
🤔 இந்த ரயில் நேர மாற்றத்தால் மக்களுக்கு என்ன கூடுதல் பயன் ???😀😀😀 இந்த வழித்தடத்தில் தூடி நெல்லை செங்கோட்டை வரை EMUரயில் விட்டால் கூடுதல் பயணிகள் பயன் பெறுவார்கள். திட்டமிடுவார்களா தென்னக ரயில்வே ????
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











சுந்தர்Aug 1, 2023 - 11:20:45 AM | Posted IP 172.7*****