» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரேமானந்த் (45). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது இவர் குடும்பத்துடன் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் மோட்டார் பைக்கில், ஆழ்வார் திருநகரிக்கு சென்றுவிட்டு இரவில் தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பொட்டல்காடு விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த கார், அவரது பைக் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

தூத்துக்குடியில் 1 கிலோ தங்க நகை மோசடி: பெண் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:03:24 PM (IST)

ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குழு : தூத்துக்குடியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு!
செவ்வாய் 18, மார்ச் 2025 7:58:52 PM (IST)
