» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)
குரும்பூர் அருகே பைக் விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சுடலை மகன் செல்வகுமார் (44). கொத்தனார். இவர் வேலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே பணிக்க நாடார் குடியிருப்பு கிராமம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் சாலையின் குறுக்கே சென்றுள்ளார்.
இதனால் செல்வகுமார் சடன் பிரேக் போட்டுள்ளார்.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.