» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போனில் வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய 3பேர் கைது

சனி 3, ஜூன் 2023 7:17:40 AM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கடாச்சபுரம் முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் துரைசிங். கட்டிட தொழிலாளி. குடும்ப நண்பரான, அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதை அதே பகுதி வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சந்ரு என்ற சந்திரசேகர் (28), முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த வேதமுத்து (42), ராபர்ட் குமார் (30) ஆகிய 3 பேரும் துரைசிங் வீட்டிற்கு சாமுவேல் வந்து செல்லுவதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். 

இந்நிலையில் துரைசிங் வீட்டில் இல்லாத நேரத்தில், செல்போன் காட்சியை காட்டி அவரது மனைவியை மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர், வேதமுத்து, ராபர்ட்குமார் ஆகிய 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory