» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்திற்கு விருது

சனி 3, ஜூன் 2023 7:10:29 AM (IST)

மானாவாரி வேளாண் திட்டத்திற்கான சிறந்த குழுவுக்கான விருது கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மானாவாரி வேளாண்மை திட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் புதுடெல்லி நிதி உதவியுடன் 1971 முதல் மானாவரி விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக (2018- 2022) ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், செயல் விளக்கங்கள், விவசாயிகளுக்கான வேளாண் பயிற்சிகள், வயல் விழாக்கள், ஆராய்ச்சி பதிப்பு மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2023-ம் ஆண்டிற்கான சிறந்த ஆய்வு குழுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி முன்னிலையில் கோவில்பட்டி அகில இந்திய மானாவாரி வேளாண்மை திட்டத்திற்கான சிறந்த குழு விருது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 53-வது நிறுவன நாளில் வழங்கப்பட்டது.

இந்த விருதை கோவில்பட்டி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் ஆய்வுக் குழு முதன்மை விஞ்ஞானி கோ. பாஸ்கர் மற்றும் சக விஞ்ஞானிகளான சோ. மனோகரன், வி. சஞ்சீவ் குமார், மு. மணிகண்டன் மற்றும் கு. குரு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory