» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும்பணி ஜூன் 11ம் தேதி துவக்கம்!

வெள்ளி 2, ஜூன் 2023 5:06:18 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும்பணியை வருகிற 11ஆம் தேதி போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி துவக்கி வைக்கிறார்.

உலக பிரசித்திப் பெற்ற திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா ஆலயம் எனப்படும் தூத்துக்ககுடி பனிமய மாதா பேராலயம், பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த ஆலயத்தில் இதுவரை 15 முறை தங்க தேரோட்டம் நடந்துள்ளது. கடந்த 2-2-1806ம் ஆண்டு பனிமய மாதாவின் அற்புத சொரூபம் தூத்துக்குடி வந்தடைந்ததின் 250வது ஆண்டு நிறைவாக முதல் முறையாக தங்க தேரோட்டம் நடந்தது. 

கடந்த 2013ம் ஆண்டு 15வது தங்க தேரோட்டம் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மறைமாவட்டம் துவங்கியதன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்தாண்டு திருவிழாவில் பனிமய அன்னையின் தங்க தேரோட்டம் நடக்கிறது. 

இதையொட்டி தங்க தேரோட்டத்திற்கான அனைத்து பணிகளும் ஆலய வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் தங்க தேர் அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா வரும் ஜூலை 26ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகரில் இருந்து தூத்துக்குடிக்கு செயின்ட் ஹெலேனா என்ற கப்பலில் கடந்த 1555ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பனிமய மாதா சொரூபம் வந்தடைந்த நாளை தூத்துக்குடி மறைமாவட்ட மக்கள் புனித நாளாக கடைபிடித்து அன்றைய தினம் சுபநிகழ்ச்சிகளை இன்றளவும் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த ஆண்டும் 16வது தங்க தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 9ம் தேதியன்று தங்க முலாம் பூசுவதற்காக மாதா சொரூபம் உரிய திருப்பலி, வழிபாடுகளுக்கு பின்னர் பீடத்தில் இருந்து இறக்கப்படுகிறது. தொடர்ந்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக இரு நாட்கள் வைக்கப்படுகிறது. வரும் 11ம் தேதி போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி வருகை தந்து, முலாம் பூசும் பணிகளை துவக்கி வைக்கிறார். 

இதையடுத்து மாதா சொரூபம் பல்லக்கில் ஏற்றி அருகில் உள்ள தஸ்நேவிஸ் மாதா துவக்கப் பள்ளியில் உள்ள தனியறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அன்னைக்கு தங்க முலாம் பூசப்படுகிறது. இந்த அறைக்குள் முலாம் பூசும் பணியாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த பணிகள். 10 முதல் 15 நாட்கள் வரையில் நடக்கும். அதன் பின்னர் பனிமய அன்னையின் சொரூபம் மீண்டும் ஆலயத்தில் அவருக்குரிய சிம்மாசனத்தில் அமர்த்தப்படுகிறது. 


மக்கள் கருத்து

AzhaguvelJun 4, 2023 - 12:24:10 PM | Posted IP 172.7*****

போப் ஆண்டவர் நமது தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு வருகை தருவது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அவர்களின் வருகைக்கு காத்திருக்கிறேன் திருவிழா நன்மையாக முடிவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

TutianJun 3, 2023 - 10:21:16 AM | Posted IP 172.7*****

Sancta Maria Ora Pro Nobis

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory