» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை: தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

வியாழன் 1, ஜூன் 2023 8:18:01 PM (IST)



பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை வழங்கிவரும் பெண் சுகாதார தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துரையாடினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் இன்று (01.06.2023) புதூர் மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று மருத்துவ சேவை வழங்கிவரும் பெண் சுகாதார தன்னார்வலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், பெண் சுகாதார தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மூலம் பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகளை வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது. 

அந்தவகையில், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மேற்கண்ட 95 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று உயர் இரத்த அழுத்தம், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை சிகிச்சைகள், பெரிடோனியல் டயாலிசிஸ் போன்ற மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார்கள். மேலும், HCL நிறுவனத்தின் வாயிலாக கூடுதலாக 61 பெண் சுகாதார தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார்கள். எனவே, அனைத்து பெண் சுகாதார தன்னார்வலர்களும் சமுதாயத்தில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று ஒரு சேவை மனப்பான்மையோடு வந்துள்ளீர்கள். 

பொதுமக்களை நேரில் அணுகும் போது அவர்களை பரிசோதனை செய்து, தேவையான மருந்துகளை வழங்குதல், மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் வழங்குதல், மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், அவர்களை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற சுகாதாரச் சேவை முறையாக வழங்க வேண்டும். பெண் சுகாதார தன்னார்வலர்களாகிய உங்களின் தேவைகளை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்யும், அதுபோன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை முறையாக நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, அனைத்து பெண் சுகாதார தன்னார்வலர்களும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாக செயல்படும் பட்சத்தில் தான் ஆரோக்கியமான ஓர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில், புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய 02 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் HCL நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 44 ஊராட்சிகளையும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 51 ஊராட்சிகளையும் தத்தெடுத்து, 95 ஊராட்சிகளுக்கும் தேவையான குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்தவம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அந்த கிராமங்களில் விவசாயப் பெருங்குடி மக்களை ஊக்குவித்து விவசாயத்தைப் பெருக்குதல், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், புதூர் ஊராட்சி ஒன்றியத்திலும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திலும் தலா 10 அங்கன்வாடி மையத்தைத் தெரிவு செய்து, அந்த அங்கன்வாடி மையங்களை மாதிரி அங்கன்வாடி மையங்களாக மாற்ற வேண்டுமென்று அடிப்படையில் குழந்தைகள் எளிமையான முறையில் கல்வி கற்கும் வகையில் அங்கன்வாடி மையத்திற்கு ஸ்மார்ட் டிவி, டேபிள், சேர், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களும், அதுபோன்று, சென்னமரெட்டியபட்டி, செங்கோட்டை, வேம்பார், வில்வமரத்துப்பட்டி மற்றும் கீழவிளாத்திகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அந்தந்த கிராமங்களிலேயே தையல் மையம் ஏற்படுத்தப்பட்டு, தலா 24 மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும் ர்ஊடு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றைதினம் சென்னமரெட்டியபட்டியில் உள்ள மாதிரி அங்கன்வாடி மையத்தினையும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வில்வமரத்துப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தையல் மையத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அதனைத்தொடர்ந்து, சிறப்பாக களப்பணியாற்றி 04 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில், ர்ஊடு நிறுவனத்தின் செயல் தலைவர் எம்.விஸ்வலிங்கம், HCL நிறுவனத்தின் முதுநிலை திட்ட மேலாளர் வைபவ் சௌஹான், ஆஷோசியட் செக்டார் லீடு முகுல்குமார், விளாத்திக்குளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலபதி, விளாத்திக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், வட்டார மருத்துவ அலுவலர் (நாகலாபுரம்) ரவீந்திரன், மாவட்ட பயிற்சிக்குழு மருத்துவ அலுவலர் வைகுந், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள், கோவில்பட்டி) அவர்களின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உட்பட பெண் சுகாதார தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory