» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வளர்ச்சியில் அமைச்சர்களுக்கு அக்கறை இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

வியாழன் 1, ஜூன் 2023 3:24:30 PM (IST)



"தூத்துக்குடியின் வளர்ச்சியில் இங்குள்ள அமைச்சர்களுக்கு அக்கறை இல்லை" என பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்தது வரவேற்கக் கூடியது. கடந்த முறை தமிழக முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற போது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடவில்லை அதனை வெளியிட வேண்டும்.

உதயநிதி பவுண்டேஷன், நோபல் பவுண்டேஷன் இரண்டும் ஒரே முகவரியில் உள்ளதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ஒருபோதும் ஒத்துக் கொள்ள முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டப்படும் என கூறி இருப்பது தெரிந்தும் தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேகதாது அணை கட்டப்படும் என பெயரளவில் மட்டும் அவர்கள் குறிப்பிடவில்லை நேற்று நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளிடமும் மேகதாது அணை கட்ட தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கு எதிராக தமிழக அரசு எந்தவித எதிர்ப்பு குரலையும் எழுப்பாமல் உள்ளது இது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டக்கூடிய சூழ்நிலை வந்தால் தமிழக பாஜக போராடியாவது அதனை நிச்சயம் தடுத்து நிறுத்தும். தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் பகுதிகள் வளர்ச்சி பெற வேண்டும். இங்கு உற்பத்தி தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். தென் மாவட்ட வளர்ச்சியை கவனத்தில் கொண்டு சிறப்பு பொருளாதார மாநாட்டை தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்களுக்கு இந்த பகுதி மீது அக்கறை வேண்டும். அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இங்கே புதிய அரசு கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டும். தொடர்ந்து தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த பகுதி வளர்ச்சி பெறும்.

தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து வரும் ஜூலை 9ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை துவங்க இருக்கிறேன். அப்போது திமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இங்கு மணல் கடத்தலை தடுக்க முயலும் விஏஓ உள்ளிட்ட வருவாய் துறையினர் வெட்டி கொலை செய்யப்படுகின்றனர். வருமான வரி சோதனைக்கு செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பல பெண்கள் தாலி இழப்பதற்கு காரணமாகி வரும் மது மூலமாக ஊழல் செய்து வரும் அமைச்சர்களை கர்மா ஒருபோதும் விட்டு வைக்காது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள். திமுக அமைச்சர்கள் மனிதர்களாக கூட இருக்க தகுதி இல்லை. தமிழகத்தில் டாஸ்மார்க் வருவாய் மட்டும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி 1400 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளார். தமிழக மண்ணில் அழிவது சத்தியம் நிச்சயம் நடக்கும் என்றார். பேட்டியின் போது பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

தூத்துக்குடி மக்கள்Jun 1, 2023 - 06:30:01 PM | Posted IP 172.7*****

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் மூடப்பட்டு விட்டது . காப்பர் பற்றாக்குறை என்றால் உ .பி ,பீஹார் ,ராஜஸ்தான் போன்ற இடங்களில் இந்த ஆலைய திறந்தால் நிறைய வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் .அங்குள்ள மக்கள் வேலைக்காக மற்ற மாநிலங்களுக்கு அலைய வேண்டாம் .ஆதலால் இங்குள்ள ஸ்டெர்லைட் அலையை மற்ற மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுங்கள் .அண்ணாமலை ஐயா .

JAIHINDJun 1, 2023 - 04:33:38 PM | Posted IP 172.7*****

100 % TRUE....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory