» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடைபாதையை நடந்து செல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: மேயர் அறிவுறுத்தல்!

செவ்வாய் 30, மே 2023 11:31:10 AM (IST)



தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள நடைபாதையை  பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதனை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல் அடுக்கு வாகன நிறுத்துமிடமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. ஆகையால் அந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு அதனை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் அந்த நடைபாதையானது பள்ளிக் குழந்தைகளும் பொது மக்களும் நடந்து செல்வதற்கு மட்டுமே என்று மேயர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி, வாகன காப்பகத்தில் நிறுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் தெரிவித்தனர். மேலும், இன்று ஒரு நாள் மட்டும் வாகனங்களை வாகன காப்பகத்தில் இலவசமாக நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



மக்கள் கருத்து

TN69மே 30, 2023 - 10:44:05 PM | Posted IP 172.7*****

ரோடுகளை விட நடைபாதை நல்ல அகலமாக உள்ளது, corporation corporates தான் support பண்றாங்க தூத்துக்குடில மட்டும்

தமிழன்மே 30, 2023 - 05:21:07 PM | Posted IP 172.7*****

பல கோடி செலவு செய்து கட்டி இருக்கிறோம் எப்படி வசூல் செய்வது ?

KARNARAJ RAMANATHANமே 30, 2023 - 12:31:58 PM | Posted IP 162.1*****

GOOD ACTION. ESSENTIAL NEED

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory