» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை ஊழியர் கொலை: எஸ்பியிடம் தந்தை பரபரப்பு புகார்!!

திங்கள் 29, மே 2023 4:35:37 PM (IST)



தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றி வந்த தீயணைப்புத்துறை ஊழியர் கலைச்செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். 

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பெரியநாயகி புரத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில், "நான் சர்வேயராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது வீட்டில் இருந்து வருகிறேன். எனக்கு சௌந்தரி மற்றும் கலைச்செல்வன் என 2 பிள்ளைகள் உள்ளனர். மகன் கலைச்செல்வனுக்கு சென்னையை சேர்ந்த முத்தையா என்பவரின் மகள் நிவேதா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தேன். அவர்களுக்கு 6மாத குழந்தை உள்ளது. 

ஆனால் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனது மகன் கலைச்செல்வன் தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத் துறையில் கடந்த 5வருடமாக பணிபுரிந்து துறைமுக கோர்ட்டர்ஸ் ஆன பாரதி நகர் டைப் 1, 202 பிளாக்கில் வசித்து வந்தார். கடந்த 13.04.23 அன்று எனது மகன் குடியிருக்கும் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டிற்கு ஒதுக்குபுறமான பின்பகுதியில் இறந்து கிடப்பதாக கூறப்படுகிறது. 

பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடம்பில் பல இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறியுள்ளார்கள். இரண்டு மாடிக்கு மேலிருந்து கீழே விழுந்தால் கை, கால்கள் மூட்டுப்பகுதி எலும்புகள் உடைந்திருக்கும் மற்றும் தலை பகுதி போன்றவை சிதறி மண்டை உடைந்திருக்க வேண்டும். ஆனால் எந்த வெளிக்காயமும் இல்லாமல் உடம்பு முழுவதும் உள் காயங்களாக காணப்பட்டிருக்கிறது. கீழே விழுந்து இறந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே எனது மகன் மரணம் தொடர்பாக வீட்டின் அருகில் உள்ளோர்கள் உடன் பணிபுரிந்த நபர்கள் அனைவரையும் விசாரணை செய்து எனது மகன் உபயோகித்த இரண்டு மொபைல் போன்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, போன்றவற்றை ஆய்வு செய்து எனது மகனை கொலை செய்த நபர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

விடாதீங்கள்மே 30, 2023 - 12:44:31 PM | Posted IP 172.7*****

1.சைபின் 2. ரமேஷ் 3.சுரேஷ் 4. சேவியர் டொனால்டு 5. பாலமுருகன் போலீஸ் காஸ்டடி எடுத்து சிறப்பாக கவனித்தால் உண்மை வெளிவரும்.

விடாதீங்கமே 30, 2023 - 01:07:19 AM | Posted IP 162.1*****

இந்த case ah...

ADVOCATEமே 29, 2023 - 07:36:47 PM | Posted IP 172.7*****

WE HAVE A REQUEST FOR THE SUPERINTENDENT OF THE POLICE TO TAKE ACTION AND ARRANGE A SPECIAL TEAM TO CONFIRM THE ARREST BY THE ACCUSED.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory