» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.71 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

வெள்ளி 26, மே 2023 12:35:06 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு திட்டங்களின் கீழ் முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மாநகராட்சி பகுதிகளில் நிறைவடைந்த திட்டப்பணிகளை திறந்து வைத்தார். 

விழாவில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்}மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா,  ஜி.வி.மார்கண்டயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory