» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு: பள்ளி மீது உரிய நடவடிக்கை- சிஇஓ பேட்டி!!

வெள்ளி 26, மே 2023 10:17:55 AM (IST)



பனவடலிசத்திரம் அருகே பள்ளி வாகனம் விபத்தில் சிக்கியதில் மாணவர்கள் காயம் அடைந்த விவகாரத்தில், சிறப்பு வகுப்பு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தெரிவித்தார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்த நல்லூரைச் சேர்ந்தவர் குருசாமி (45). இவர் நேற்று முன்தினம் காலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்று விட்டு, மாலையில் அங்கிருந்து காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இதற்கிடையே சங்கரன்கோவிலில் இருந்து தனியார் பள்ளி பிளஸ்-2 மாணவர்களை ஏற்றி வந்த பஸ், பனவடலிசத்திரம் அருகே மேலநீலிதநல்லூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சென்றது. 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஊத்துமலை யைச் சேர்ந்த தங்கம் நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பள்ளி பஸ்சை டிரைவர் திருப்பியபோது, குருசாமியின் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் குருசாமி, அவருடைய மனைவி வேலுத்தாய், மகன் மனோஜ்குமார், குருசாமியின் தாயார் சீதாலட்சுமி, கார் டிரைவர் அய்யனார் ஆகிய 5 பேரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த குருசாமி மகள் கற்பகவல்லி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளி பஸ்சில் இருந்த 5 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். இதுதொடர்பாக பள்ளி பஸ் டிரைவரான சங்கரன்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்த ஆறுமுகசாமி மற்றும் தங்கம் ஆகிய 2 பேர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்  பள்ளிகள்) ராமசுப்பு ஆகியோர் சங்கரன்கோவில் தனியார் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். 

பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நிருபர்களிடம் கூறியதாவது, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், தனியார் பள்ளியில் விசாரணை நடத்தப் பட்டது. இங்கு அனுமதியின்றி பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து முழுமையான விசாரணை செய்த பிறகு அதன் அறிக்கை மாவட்ட கலெக்டருக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கும் அனுப்பப்படும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory