» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் சீமான் தரிசனம்: தங்கவேல் காணிக்கையாக வழங்கினார்..!

வெள்ளி 19, மே 2023 9:12:20 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சுவாமி தரிசனம் செய்தார். 

நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார்.  அவர் இரண்டடி நீளம் உள்ள தங்கவேல் காணிக்கையாக வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக நகைகளை அடகு வைக்கும சூழல் நிலவுகிறது. ஆனால் தமிழக அரசோ விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் நிதி வழங்குகிறது. ஜல்லிகட்டு தீர்ப்பை உளம் மகிழ்ந்து வரவேற்கிறேன். ஜல்லிகட்டு என்பது 5ஆயிரம் ஆண்டு மரபு. சிவன் கோவிலில் கூட முன்பு காளைதான் உள்ளது

கர்நாடகா தேர்தலில் பா.ஜ.கவை காங்கிரஸ் வென்றது பெரிய விசயம் அல்ல. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில்தான் நாசகார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக ஜி.எஸ்.டி., நீட் என பல நடைமுறைகள் கொண்டுவரப்பட்டது. தற்போதை பா.ஜ.க அரசு அதனை செயல்படுத்தி வருகிறது. பா.ஜ.கவுக்கு மாற்று காங்.கிடையாது. அந்தந்த மாநில கட்சிகள் தான் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பாக இருக்க முடியும் என்றார்.


மக்கள் கருத்து

ennaமே 21, 2023 - 03:30:11 PM | Posted IP 162.1*****

nadagam ithu...kodumai kodumai

JAIHINDமே 20, 2023 - 09:59:04 AM | Posted IP 172.7*****

கிறிஸ்தவ மிஷனரியின் ஏமாற்று வேலை நடிப்பு விடியல் அரசை / டயர் நக்கியை மிஞ்சிவிடும்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory