» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.31 கோடி ஆம்பர் கிரீஸ் பறிமுதல் : முன்னாள் கவுன்சிலர் உட்பட 4பேர் கைது!

வெள்ளி 19, மே 2023 6:03:32 PM (IST)தூத்துக்குடியில் ரூ.31 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரீஸை பதுக்கி கடத்த முயன்றதாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சட்டவிரோத பொருட்கள் விற்பனை நடப்பதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்பி முரளி தலைமையிலான அதிகாரிகள் கடற்கரை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 4 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள், கேரளாவை சேர்ந்த அணில்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டெத்தோன், ஆனந்தராஜ், தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஈசுவரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வைத்து இருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பையில் 'ஆம்பர்கிரீஸ்' எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் ரூ.31 கோடியே 68 லட்சம் மதிப்பிலான 18 கிலோ திமிங்கில உமிழ்நீர் கட்டிகள் இருந்தன.

இந்த திமிங்கில உமிழ்நீர் கட்டி நறுமண பொருட்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனை வெளிநாடுகளில் அதிக விலைக்கு வாங்கி வருகின்றனர். இதை சட்டவிரோதமாக 4 பேரும் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

semmaமே 19, 2023 - 07:43:07 PM | Posted IP 172.7*****

semma

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory