» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 12:28:08 PM (IST)

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சில்லா நத்தத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (35). இவர் சொந்தமாக லாரி செட் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை தூத்துக்குடி பண்டாரம்பட்டி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

நல்லதம்பியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி மண்டை இரண்டாக உடைந்து பிளந்த நிலையில் கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் "நல்லதம்பிக்கு  தொழிலில்  நஷ்டம் ஏற்படவே பல இடங்களில் கடன் வாங்கினாராம். ஆனால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையாம். இதனால் கடன் கொடுத்தவர்கள் வீடுதேடி வந்து பணத்தை கேட்டுள்ளனர். இதனால் அவரது தம்பி முத்துராஜ் (33) என்பவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 

அண்ணனை தேடி கடன்காரர்கள் வீட்டுக்கு வருவதால் தன்னிடம் கடன்களை கேட்பார்களோ என்று அச்சத்தில் அண்ணனிடம் தகராறு செய்தாராம். இது சம்பந்தமாக தனது சித்தப்பா குளத்தூர் அருகே உள்ள முத்து குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துராஜ் (28) என்பவரிடம் விவரத்தை தெரிவித்தாராம் இதனால் இரண்டு பேரும் சேர்ந்து நல்ல தம்பியை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து 2பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

என்னApr 2, 2023 - 03:32:05 PM | Posted IP 162.1*****

கொடுமை சார் இது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory