» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:54:15 AM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இயேசு கிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தபோது, பேரீச்சை மரத்தின் குருத்துகள், ஒலிவ மரத்தின் கிளைகள் மற்றும் லில்லி மலா்களை ஏந்தியபடி இயேசுவை முன்னால் போகச் செய்து மக்கள் அணிவகுத்துச் சென்றாா்கள். அதை நினைவுகூரும் வகையில், உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஏந்தியபடியும் ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனா்.

சின்னக் கோயில் என அழைக்கப்படும் திருஇருதயங்களின் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோா் கலந்து கொண்டு கையில் குருத்தோலை பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு சென்றனா். பின்னா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)
