» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)
தட்டார்மடம் அருகே வீட்டின் மாடியில் இருந்து வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள கடக்குளத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (27). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜநித்யா (24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சூர்யா கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மாடி வீடு கட்டும் பணியிடத்துக்கு சூர்யா சென்றாராம். அப்போது மது அருந்திய போதையில் 2-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)
