» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

வெள்ளி 24, மார்ச் 2023 11:36:20 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம்  மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்காக அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வர இலவச பேருந்து பயண சலுகை பெற்று பயனடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 28.03.2023 அன்றும் உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 29.03.2023 அன்றும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் ஏற்கெனவே இந்த அலுவலகம் வாயிலாக இலவச பயண அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் 28.03.2023 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல், கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றுடன் 29.03.2023 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ள இலவச பேருந்து பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory