» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பங்குனி உத்திரம்: தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரிக்கை!

வியாழன் 23, மார்ச் 2023 11:19:57 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப்.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து இளைஞர் முன்னணி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் கவிசண்முகம் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் "வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பங்குனி உத்திரத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தென் மாவட்டங்களில் இந்துக்கள் அனைவரும் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். 

இதற்காக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் வழக்கம் காலாகாலமாக நடந்து வருகிறது.  அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்  என இந்து இளைஞர் முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

முத்துசாமிMar 25, 2023 - 03:12:50 PM | Posted IP 162.1*****

நல்ல செயல் உத்திரம் தேதியில் குழப்பம் உள்ளது

ராஜன்Mar 25, 2023 - 05:17:11 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாவட்ட மக்களின் பலவருட கோரிக்கை நிறைவேற்றவேண்டும் . மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான் .

மாரியப்பன்Mar 24, 2023 - 09:12:41 PM | Posted IP 162.1*****

விடுமுறை தேவையானது தான் இதனை நிறைவேற்ற வேண்டும்

A.. SvakumarMar 24, 2023 - 02:21:24 PM | Posted IP 162.1*****

பயனுள்ள கோரிக்கை. நன்றி 🙏

kumarMar 24, 2023 - 11:19:31 AM | Posted IP 162.1*****

panguni uthiram 4th or 5th

ஆனந்தன்Mar 23, 2023 - 03:13:17 PM | Posted IP 162.1*****

இந்த மாதிரி மிகவும் அவசியமான விண்ணப்பம் பரிசிலிக்கப்படவேண்டும்

kumarMar 23, 2023 - 01:49:12 PM | Posted IP 108.1*****

Maavattaachiyar pariseelanai seythu Panguni uththira andru vidumurai alikkavendum....

rajaramMar 23, 2023 - 11:47:30 AM | Posted IP 162.1*****

Well done. Take effort. On sanction, can enjoy peace with family god with family.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory