» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஷம் குடித்த தூய்மைப் பணியாளர் மரணம்
வியாழன் 23, மார்ச் 2023 9:59:38 AM (IST)
தூத்துக்குடியில், பணி நிரந்தரம் செய்ய பணம் கேட்டு மிரட்டியதால் விஷம் குடித்த தூய்மை பணியாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுக் காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணி மேற்பார்வையாளர் பணியை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை மேற்பார்வையாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க, பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால், அவரை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சுடலைமாடன் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் நேற்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுடலைமாடன் இறந்தார். இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஒரு வழக்குப்பதிவு
சுடலைமாடன் மனைவி தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 2 பேர் மீதும் தற்கொலை தூண்டியதாக போலீசார், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உடன்குடி பஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம், முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி வீடு, பஜார் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










