» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் வெற்றிக்கு காரணம் மக்களின் பங்களிப்பு : எச்.ராஜா பேச்சு

வியாழன் 23, மார்ச் 2023 7:42:37 AM (IST)

மத்திய அரசின் வெற்றிக்கு காரணம் ஒவ்வொன்றிலும் மக்களின் பங்களிப்பு உள்ளது என மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசினார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெரு வாஜ்பாய் திடலில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, கட்சி, குடும்பத்தில் கட்டுப்பாடு இல்லை. தமிழக மக்களுக்கு தி.மு.க. ஒரு பாரமாக இருக்கிறது. மத்திய அரசின் வெற்றிக்கு காரணம் ஒவ்வொன்றிலும் மக்களின் பங்களிப்பு உள்ளது. இதனால் மக்கள் ஏற்று இருக்கிறார்கள். 10 கோடி குடும்பங்களுக்கு நாடு முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடி தான். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 30 இடங்களை வெல்ல வேண்டும். அதற்கு நாம் உறுதி எடுத்து உழைக்க வேண்டும்" என்றார்.


மக்கள் கருத்து

ஹரஹர ராஜாMar 23, 2023 - 08:43:25 AM | Posted IP 162.1*****

ஆமா. எதை வாங்கினாலும் G S T, Gas விலை போன்றவற்றாலும், வழக்கமான வடையாலும் வெற்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory