» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடற்கரையில் மாணவ, மாணவிகள் தூய்மை பணி
புதன் 22, மார்ச் 2023 4:13:25 PM (IST)

தூத்துக்குடி தருவைக்குளம் கடற்கரையில் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தருவைக்குளத்தில் தமிழ்நாடு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை, வனத்துறை சார்பில் "உலக வனநாள், உலக நீர் தினம் மற்றும் உலக சிட்டுக் குருவிகள் தின விழா மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக மண்டல அலுவலர் திவாகர், வனச்சரக அலுவலர் ஜினோ ப்ளஸ்ஸில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சூழல் சுற்றுலா மைய தலைவர் அமலதாஸ், கிராம கடல் பாதுகாப்பு சுற்றுச் சூழல் மேலாண்மைக் குழு தலைவர் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவ மாணவியர் பொறுப்பாசிரியர் ரவிக்காந்த் தலைமையில் பேரணியாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், வனவர்கள் அருண்குமார், மதன்குமார், அஸ்வின், வன காப்பாளர்கள் பாலாஜி, மணிகண்டன், தன்னார்வலர் டிக்கிரோஸ், வன வேட்டை தடுப்பாளர் அஜித் மற்றும் ஆசிரியர் ஜெய கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










