» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)
ஏற்கனவே 3 திருமணங்கள் செய்ததை மறைத்து, தூத்துக்குடி பெண்ணை 4வதாக திருமணம் செய்து மோடியில் ஈடுபட்ட கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் வினோத் ராஜ்குமார்(45). இவருக்கும் தூத்துக்குடி பெரைரா தெருவை சேர்ந்த பியூலா(40)என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வினோத் ராஜ்குமார் தனது சொந்த ஊரான திருமுல்லைவாயில் பகுதிக்கு மனைவி பியூலாவிடம் சொல்லாமல் சென்றுள்ளார்.இதனால் சிறிது நாட்கள் கழித்து கணவனை தேடி நேரில் சென்றபோது அங்கு வைத்து அவருக்கு ஏற்கனவே 3-திருமணங்கள் முடிந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சொந்த ஊர் தூத்துக்குடி வந்த பியூலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் வினோத் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏற்கனவே 3-திருமணங்கள் முடித்ததும் 4-வதாக தூத்துக்குடியை சேர்ந்த பியூலாவை பணத்திற்காக திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திருமணத்தில் தனது 3-வது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 4 திருமணங்கள் செய்து மோசடி செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த திருமணங்களுக்கு உடந்தையாக இருந்த வினோத் ராஜ்குமாரின் 3-வது மனைவி மற்றும் வினோத் ராஜ்குமார் அப்பா, மற்றும் அவரது தங்கை, அவரது கணவர் உட்பட 10 பேர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










