» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்காசி பாதிரியார் மீது புகார்

புதன் 22, மார்ச் 2023 11:30:30 AM (IST)

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்காசி பாதிரியார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், "49 வயதான பாதிரியார் ஒருவர், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.

இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதிரியாரை காவல்  நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

UNMAIMar 22, 2023 - 03:56:59 PM | Posted IP 162.1*****

இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது காலம் காலமாக தெரிந்தும் மக்கள் இவர்களை நம்புவதால் பாதிரிகளுக்கு பயம் என்பதே கிடையாது....இந்தியாவில் அல்லலேலூயா என்று இருப்பவர்கள் இப்படித்தான். ஒரு சில மக்கள் நேர்மையாக பக்தியுடன் இருப்பார்கள் , ஆனால் அதிகபட்சம் மக்கள் culture மோசமாக தன இருக்கும்.....

TamilanMar 22, 2023 - 01:06:37 PM | Posted IP 162.1*****

udalnilai sari illaiendral paathiriyaridam sellum moodapalakkavalakathai kaivittu maruthuvamaniku sellungal....

தமிழன்Mar 22, 2023 - 12:03:55 PM | Posted IP 162.1*****

பெண் பிள்ளைகளுக்கோ அல்லது ஆண் பிள்ளைகளுக்கோ உடல் நிலை சரியில்லை என்றால் அருகில் இருக்கும் டாக்டரிடம் சென்று தகுந்த வைத்தியம் பாருங்கள். அதைவிட்டு விட்டு சர்ச்சுக்கு சென்று பாதிரியிடம் வைத்தியம் பார்த்தால் இந்த நிலை தான் வரும். நாங்கள் எல்லா பாதிரியார்களையும் சொல்லவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory