» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் வருகிற 29ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 03 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 29.03.2023 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 28.03.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 28.03.2023 அன்றே ரூபாய் 2000/- முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ரூ.18% முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு 9443382974, 9498196359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










