» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரணிகளைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க வேண்டும் : ஆட்சியர்

புதன் 22, மார்ச் 2023 9:57:18 AM (IST)


ஊரணிகள் மற்றும் பண்ணைக்குட்டைகளைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார பகுதிகளில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,   நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டில்  தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் தூத்துக்குடி  மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டப்பணிகளுக்காக ரூ.1,286 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் 7 திட்டங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு 49 கிராம ஊராட்சிகளில் 66 நீர்வடிப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 91 நீர்வடிப்பகுதிக்குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நுழைவு கட்டப்பணிகளில் தடுப்பணை அமைக்கும் பணிகளும், இயற்கை வள மேம்பாட்டுப்பணிகளில் ஊரணி சீரமைத்தல் மற்றும் வரத்துக்கால் சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

விளாத்திகுளம் வட்டாரம் பூசனூர் பகுதியில் சோலையம்மாள் என்ற விவசாயி தோட்டத்தில் அமைந்துள்ள பண்ணைக்குட்டையை இன்று பார்வையிட்டேன். பண்ணைக்குட்டையை சுற்றிலும் மரக்கன்றுகள் நடவு செய்திட அறிவுரை வழங்கினேன். மானாவாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மழைநீர் கூடுதலாக சேகரிக்க வேண்டும். மேலும், சீரமைக்கப்பட்ட ஊரணிகள் மற்றும் பண்ணைக்குட்டைகளை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அதிக கவனத்துடன் திறம்பட இத்திட்டத்தை செயல்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன்.  

மேலும் பூசனூர் மற்றும் மார்த்தாண்டம்பட்டி  நீர்வடிப்பகுதியில் ஊரணி சீரமைத்தல் பணியையும், வரத்துக்கால் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தேன்.  மேலும், உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், சுத்தமான தண்ணீர் அனைத்து மக்களுக்கும் எல்லா நேரத்திலும் தடையின்றி கிடைக்கும் வகையில் தண்ணீர் சேமிப்பு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என  மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,   தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,  மார்த்தாண்டம்பட்டி மற்றும் பூசனூர் நீர்வடிப்பகுதிகளில் உள்ள 16 விவசாயிகளுக்கு ரூ.1இ04இ700/- மதிப்புள்ள பேட்டரி விசைத்தெளிப்பான்கள், 11 விவசாயிகளுக்கு ரூ.88,000/- மதிப்பில் தார்ப்பாய்கள், நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு 10 பயனாளிகளுக்கு ரூ.1இ00இ000/- மதிப்பில் 10 தையல் இயந்திரங்கள், ரூ.40,000/- மதிப்பில் மாவு அரைக்கும் இயந்திரங்கள், ஒரு பயனாளிக்கு  2 ஆடுகள் வீதம் 10 பயனாளிகளுக்கு 20 ஆடுகள் ஆகியவற்றை வழங்கினார்.

ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் சொ.பழனிவேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) வே.சாந்திராணி, மற்றும் மார்த்தாண்டம்பட்டி மற்றும் பூசனூர் நீர்வடிப்பகுதிகளின் நீர்வடிப்பகுதிக்குழுத் தலைவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory