» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி.மு.க. வன்முறை கட்சி : எச்.ராஜா பேட்டி

புதன் 22, மார்ச் 2023 7:34:24 AM (IST)

தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி. நேருவின் தம்பிக்கு நடந்தது போல் சிவாவுக்கும் நடக்குமோ என்ற கேள்வி எழுகிறது என பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மாலையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி என்று அனைவருக்கும் தெரியும். தற்போது அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகின்றனர். திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. நேருவின் தம்பிக்கு நடந்தது போல் சிவாவுக்கும் நடக்குமோ என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு பாஜககாரர் கூட உயிரோடு இருக்க முடியாது என்று பேசிய ஆர்.எஸ்.பாரதியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தி.மு.க.வுக்காக உழைத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை அந்த கட்சி நிறை வேற்றவில்லை. அதேபோல் மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.7ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 60 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் கொடுக்கலாம். இதுவரை அதற்கான தகுதி என்ன? என்பது குறித்தும் அறிவிக்க வில்லை. 

இது மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட். இலவச திட்டங்களால் தான் தமிழ்நாட்டில் கடன் சுமை அதிகரித்துள்ளது. பா.ஜ.க.வில் ஒரு நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் மாநில ஒழுங்கு கட்டுப்பாட்டு குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்தல்களில் உள்ள ஊழல்களை களைய வேண்டும். அதற்காக அண்ணாமலை சில கருத்துக்களை கூறியுள்ளார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாக சில கருத்துக்கள் வெளியே வந்தன. அதற்கும் அவர் தெளிவாக பதில் அளித்துள்ளார். கூட்டணி முடிவு குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை இளமையான தலைவர். அவர் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், முன்னாள் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர். தொடர்ந்து கிருஷ்ணன்கோவில் திடலில் நடந்த கட்சியின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிMar 22, 2023 - 02:26:45 PM | Posted IP 162.1*****

சொல்லிட்டாரு பெரிய அமைதி விரும்பி. இது போற இடம் பூரா வில்லங்கத்தை உருவாக்குவாரு

hahaMar 22, 2023 - 08:28:53 AM | Posted IP 162.1*****

nee yae oru vanmurai.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory