» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை : திமுக மகளிர் அணி கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 11:52:01 AM (IST)

தமிழக பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று திமுக மகளிர் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். இதையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் முன்னாள் மாநகராட்சி மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ப்ளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, வட்டச் செயலாளர் கதிரேசன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜெய்கனி, கலாவதி, சத்தியா, ரேவதி, நாராயண வடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










