» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!

செவ்வாய் 21, மார்ச் 2023 11:31:03 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி டூவிபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (65), இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்கள் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை்ககு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்து கிடந்தது. 

இதுகுறித்து அவர் சென்னையில் உள்ள கருப்பசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர்  முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் நகை, ரூ.1லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

Pethuselvi.T AnandMar 23, 2023 - 11:15:27 AM | Posted IP 162.1*****

Police night rounds varanum please in all area street cornerilpasanga thanni adippathu kanja adippathu Ella areavilum irukku especially shanmugapuram very worst please police rounds vaanga

ஆண்டMar 21, 2023 - 02:47:39 PM | Posted IP 172.7*****

பரம்பரையா இருப்பான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory