» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இருதரப்பினர் இடையே பிரச்சினை: சேகர குரு உள்பட 10 பேர் மீது வழக்கு
செவ்வாய் 21, மார்ச் 2023 7:38:04 AM (IST)
சாத்தான்குளம் அருகே இருதரப்பினர் இடையே பிரச்சினை தொடர்பாக சேகர குரு அவரது மனைவி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் அதிசயராஜ் (56). இவர் அங்குள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஊழியராக உள்ளார். அங்குள்ள டி.டி.றி.டிஏ. நடுநிலைப்பள்ளி அருகில் வரவேற்பு அலங்கார வளைவு அமைக்க பள்ளி நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இதுதொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை உருவானதால் அரசின் அனுமதி பெற்று அலங்கார வளைவு அமைக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அரசின் அனுமதி பெறாமல் கடந்த மே மாதம், பள்ளிக்கூடம் அருகில் அலங்கார வளைவு அமைக்க முயன்றதால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக மிகாவேல் என்பவருடைய மனைவி மேனகா (40) அளித்த புகாரின்பேரில் அதிசயராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் அதிசயராஜ் தரப்பில், சாத்தான்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அதிசயராஜ் தரப்பு சார்பில் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தான்குளம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஆர்ச் அமைக்க முயன்றது தொடர்பாக பள்ளித் தாளாளரும், சேகர குருவுமான செல்வபாரதி (40) மிகாவேல், அவரது மனைவி மேனகா (40) உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










