» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆணையர் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 9:53:41 PM (IST)

திருச்செந்தூர் நகராட்சி ஆணையரின் வாகனம் மோதி ஒருவர் உயிழந்த சம்பவத்தில் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியை சார்ந்த காஜா முகையதீன் மற்றும் அவரது மனைவி மீது கடந்த 6ம் தேதியன்று ஆறுமுகனேரி அருகில் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன் சென்ற வாகனம் மோதியதில் காஜா முகைதீன் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஆணையர் வேலவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காயல்பட்டணம் சமூக நீதிப் பேரவையின் பொதுச் செயலாளர் அகமது சாகிப் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேந்தர், தௌபிக் அன்சாரி, அல்அமீன், செல்வி, தமிழ்ப்பரிதி, முருகேசன், அந்தோணி ராஜ், லெட்சுமி சரண்ராஜ் விடுதலை செழியன் மற்றும் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










