» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண்டல தேர்தலில் டிஎஸ்எப் அணி வெற்றி செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

திங்கள் 20, மார்ச் 2023 12:27:36 PM (IST)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் டிஎஸ்எப் அணியினர் பெற்ற வெற்றி செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி நடைபெற்றது. தேர்தலின் முடிவில், டிஎஸ்எப் அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர் தமிழ்ச்செல்வன் திருமண்டல உப தலைவராகவும், குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்றக் குருத்துவ செயலராகவும், நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் லே செயலராகவும், மோகன்ராஜ் அருமை நாயகம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி எதிரணியான  எஸ்டிகே ராஜன் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில் டிஎஸ்எப் அணி வெற்றி பெற்றது செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்டிகே ராஜன் அணியினர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், டிஎஸ்எப் அணி வெற்றி செல்லும் என்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டிஎஸ்எப் அணியினர் தூத்துக்குடி மற்றும் நாசரேத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory