» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடகு வைத்த ரூ.1 கோடி நகை மோசடி : போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

ஞாயிறு 19, மார்ச் 2023 8:10:18 AM (IST)

நெல்லையில் அடகு வைத்த 246 பவுன் நகையை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அவரது தம்பியும் போலீசில் சிக்கினார்.

நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்ட தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (42). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு தனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள 246 பவுன் தங்க நகைகளை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து இருந்தார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் போதுமானதாக இல்லை. இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்டார்.

இதையடுத்து ரமேஷ் குமார் கே.டி.சி.நகர் பாலீன் தோட்டம் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் (41) என்பவரிடம் நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டார். இதையடுத்து ரமேஷ் குமார் அடகு வைத்த நகைகளை கோமதிநாயகம் திருப்பினார். ஆனால் அந்த நகைகளை ரமேஷ் குமாரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்து விடுவதாகவும் கூறிஉள்ளார். 

ஆனாலும் கோமதிநாயகம் நகைகளை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் ரமேஷ்குமார் தொடர்ந்து நகைகளை கேட்டு வந்தார். இதையடுத்து கோமதிநாயகம் தனது அண்ணன் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் இந்த பிரச்சினை குறித்து தெரிவித்தார். பின்னர் கண்ணையா, ரமேஷ்குமாரை அழைத்து நகைகளுக்காக ஏற்கனவே கொடுத்த பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நகைகளை திருப்பி கேட்கக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரமேஷ்குமார் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோமதிநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அடகு வைத்த நகையை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory