» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி மீது மொபட் மோதி விபத்து: முதியவர் பலி

ஞாயிறு 19, மார்ச் 2023 7:56:15 AM (IST)

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மொபட் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி (60). கூலி தொழிலாளி இவர் நேற்று எட்டயபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் மகளை பார்த்துவிட்டு ஊருக்கு தனது மொபட்டில் விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கழுகாசலபுரம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மொபட் மோதி அந்தோணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் லாரி டிரைவர் பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory