» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபர் கைது

ஞாயிறு 19, மார்ச் 2023 7:38:49 AM (IST)

கயத்தாறு அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ஆண்டிக்கோனார் என்பவர் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் மற்றும் போலீசார் பருத்திகுளத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமால் மகன் அன்பரசன் (26) என்பதும், காந்தாரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிள், திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

உண்டியல்Mar 19, 2023 - 10:55:53 AM | Posted IP 162.1*****

வைப்பது எல்லாம்.. வேஸ்ட்... கூகிள் பே மூலம் வாங்குங்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory