» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாப்பிள்ளையூரணியில் உலக பெண்கள் தினம்
ஞாயிறு 19, மார்ச் 2023 7:31:17 AM (IST)

மாப்பிள்ளையூரணி பாண்டியாபுரத்தில் பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் நடைபெற்றது.
பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாண்டியாபுரம் மேல அலங்காரத்தட்டு பகுதிகளில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமையில் நடைபெற்றது. பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்தி வரவேற்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் பெண்கள் கும்மி அடித்தும் சிறுமிகள் பரதநாட்டியம் ஆடியும் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்பு குழு சக்தி பேசுகையில் பெண்களும் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அரசியலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விழாவில் பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய், மேல அலங்காரத்தட்டு ஊர் தலைவர் கிருஷ்ணன், வழக்கறிஞர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், பெண்கள் இணைப்பு குழு மேரி ஷிலா, மேல அலங்காரத்தட்டு சந்தணம், மாப்பிள்ளையூரணி வார்டு உறுப்பினர் பாரதிராஜா, ஆழ்வார்குறிச்சி சுலோச்சனா, களக்காடு ஜெயலட்சுமி, அனுசியா, ரோஸ்லின் அமுதா, மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மகளிர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மேல அலங்காரத் தட்டு குழு அந்தோணியம்மாள் நன்றி உரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










