» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் நிலையங்களில் உயர் அதிகாரிகள் குழு ஆய்வு

ஞாயிறு 19, மார்ச் 2023 7:22:54 AM (IST)

திருச்செந்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

மத்திய அரசின் சார்பில் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1000 சிறிய ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5 ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல், நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்ள ரயில் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நேற்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் தலைமையில் தெற்கு ரயில்வே தலைமை என்ஜினீயர் மஸ்தான் ராவ், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ரதிப்பிரியா, மதுரை கதிசக்தி துணை தலைமை என்ஜினீயர் சூரியமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அந்த ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து கீழுர் ரயில் நிலையம் வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் வேமாக நடந்து வருகின்றன. இந்த பகுதிக்கு தேவையான ரயில் தண்டவாளங்கள் நேற்று சிறப்பு ரயில் மூலம் கொண்டு இறக்கி வைக்கப்பட்டன. இதனால் விரைவில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, அடுத்த மாதம் முதல் புதிய தண்டவாளத்தில் ரயில் இயக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

LekhaMar 19, 2023 - 08:22:10 AM | Posted IP 162.1*****

I want job i do my work as my best i give my best forever trust me

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory