» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
சனி 18, மார்ச் 2023 4:25:44 PM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவண ரமேஷ், சிவகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருச்செந்தூர் ரோடு சிவந்தாகுளம் பகுதியில் 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த முகில் அபினஷ் (20), கருணாநிதி நகரை சேர்ந்த சூரியபிரகாஷ் (19) என்பதும் மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம சபைக் கூட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் - ஆட்சியர் உறுதி!!
புதன் 22, மார்ச் 2023 3:09:51 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
புதன் 22, மார்ச் 2023 3:01:56 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்
புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)
