» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை : ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் பறிமுதல்
புதன் 15, மார்ச் 2023 8:04:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி பெறுவதற்காக பணம் வாங்குவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி பீட்டர் பால், தணிக்கை குழு அலுவலர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் இன்று மாலை 5 மணி அளவில் நகரமைப்பு அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாத வகையில் தடுத்து நிறுத்தினர். அனைத்து அலுவலர்களும் வெளியில் யாரையும் தொடர்பு கொள்ளாதபடி தொலைபேசி அழைப்புகளை துண்டித்தனர். அதுபோல் அலுவலகத்துக்கு வந்த சில பொதுமக்களையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து போலீசார், அந்த அலுவலகம் மற்றும் அலுவலர்களின் கார்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தியாகராஜன் என்பவரின் காரில் இருந்து ரூ.1 லட்சம், அலுவலகத்தில் இருந்து ரூ.42 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற அலுவலர்களிடம் இருந்து எந்த தொகையும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரத்தில் அலுவலகத்தில் பொதுமக்களில் ஒருவர் வைத்து இருந்த ஒரு தங்க நாணயத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தூத்துக்குடி நகரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
T.PethuselviMar 16, 2023 - 07:08:51 PM | Posted IP 162.1*****
Lanjam Ella office ullathu
ஆம்Mar 16, 2023 - 12:30:41 PM | Posted IP 162.1*****
சில திருட்டு பயலுக பூரா அரசு அதிகாரிகளே
ராஜாMar 16, 2023 - 09:59:09 AM | Posted IP 162.1*****
என்னது அரசு அலுவலகத்துல லஞ்சமா????
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

பிரேம்Mar 16, 2023 - 08:51:20 PM | Posted IP 162.1*****