» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மறை மாவட்டத்தை பிரித்து புதிய மறை மாவட்டம்: கத்தோலிக்க கூட்டமைப்பு கோரிக்கை

புதன் 8, மார்ச் 2023 4:44:33 PM (IST)

தூத்துக்குடி மறைமாவட்டத்தை பிரித்து புதிய வள்ளியூர் மறை மாவட்டம் உருவாக்கி மறை மாவட்ட நூற்றாண்டு விழாவுக்கு முன் அறிவிக்க வேண்டும்  என சாத்தான்குளம்  மறை வட்ட முதன்மை குருவிடம் வள்ளியூர் மறை மண்டல கத்தோலிக்க கூட்டமைப்பு நிர்வாகிகள்  மனு அளித்தனர். 

நூற்றாண்டு விழா காணவுள்ள தூத்துக்குடி மறை மாவட்டம் பிரிக்கப்படாமல் உள்ளது.. தென்  பகுதியைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயரை சந்திக்க பலதூரம் கடந்து வரவேண்டியது உள்ளது. இதனால்  வள்ளியூர் மறை மாவட்டம் உருவாக்க கோரி வள்ளியூர் மறை மண்டல கத்தோலிக்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு மறை மாவட்டம் உருவாக்க பல அறவழியில் போராடி வருகின்றனர்.  

இந்நிலையில் புதிய  மறை மாவட்டம் தொடர்பான குழு தலைவரும், சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ஜோசப், ரவிபாலனை,  சந்தித்து  வள்ளியூர் மறை மண்டல கத்தோலிக்க கூட்டமைப்பு தலைவர் கார்ல்லஸ், பொது செயலர் ஜான் ததேயுஸ், பொருளாளர் மரியஜார்ஜ். துணை செயலர் முரசொலிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள்    மனு அளித்தனர். 

மனுவில் கூறியிருப்பதாவது,. தூத்துக்குடி மறை மாவட்டத்தில்  சாத்தான்குளம்,  வடக்கன்குளம்  புறக்கணிக்கப்பட்ட பகுதியாக  உள்ளது.   வட பகுதியில் உள்ளவர்கள் எளிதில் மறை மாவட்ட ஆயரை சந்திக்கின்றனர். ஆனால் எங்களை சந்திக்க  மறுப்பதுடன் மறை வட்ட குருவை பாருங்கள்  என வலியுறுத்துகின்றனர். இதனால்தான் புதிய மறை மாவட்டம் வேண்டும் என வலியுறுத்தி  வருகிறோம்.  இன்னும்  3மாத்தில்  மறை மாவட்டம் நூற்றாண்டு  விழா  கொண்டாட உள்ளது. நூற்றாண்டு விழாவுக்குள்  வள்ளியூரை தலைமையிடமாக புதிய மறை மாவட்டம்  குறித்த அறிவிப்பு வெளியிட  வேண்டும். 

இதற்கென நெல்லை மாவட்டம் மன்னார்புரத்தில் மறை மாவட்ட ஆயர் அலுவலகம் அமைக்க இடம் கொடுக்கவும் தயாராக உள்ளோம்.   இந்த இரண்டு மறை வட்டத்தில் மட்டும்  சுமார் 50 பங்குகள் உள்ளன. அவ்வாறு புதிய மறை மாவட்டம்  உருவாக்கப்படாதபட்சத்தில் தொடர் உண்ணாவிரதம் போராட்ட நடத்தவும், நூற்றாண்டு விழாவை புறக்கணிப்பதுடன் இந்த 50 பங்குகளில் இருந்து விழாவுக்கு பங்களிப்பு அளிக்க மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். ஆதலால் தென் மாவட்ட கத்தோலிக்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய மறை மாவட்டம் உருவாக  ஆயர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

Lawrence AndrewMar 9, 2023 - 06:34:47 AM | Posted IP 162.1*****

Exactly correct.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory