» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒட்டுப்போடுவதில் கூட ஒழுங்கா போடவில்லை: ஓட்டுப் போட்ட மக்கள் வேதனை!

புதன் 1, பிப்ரவரி 2023 3:11:49 PM (IST)



சாலைபராமரிப்பு என்ற பெயரில் தரமற்ற முறையில் பணிகள் நடைபெறுவதாக வேம்பார் பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பார் பகுதியில் அஞ்சலகம் முதல் பெரியசாமிபுரம்  வரை தார் சாலையின் இருபுறமும் முற்றிலும் சேதமடைந்திருந்தது. சாலையின் இருபுறம் மட்டுமின்றி சாலையே குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் இருபுறமும் சல்லிக்கற்கள் மணல் கொட்டப்பட்டு வேம்பார் அஞ்சலகம் முதல் சுனாமி நகர் வரை பணி நடந்துள்ளது. 

பணி நடக்கும்போதே அந்த வழியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மக்களின் வரிப்ப ணத்தில் சாலை சீரமைப்பு என்ற பெயரில் சாலையை சீரழித்து வைத்துள்ளனர். வேம்பார் வழியாக பெரியசாமிபுரம், பச்சையாபுரம் மற்றும் பல கிராமங்களுக்கு செல்லும் பிரதான வழியாகும். இது தவிர வேம்பார் அரசு மருத்துவமனையும் இப்பகுதியில் உள்ளது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவத்திற்காக இங்குதான் வந்து செல்கின்றனர்.

ஆனால் பல தரப்பு பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ளாமல் பெயரளவிற்கு சாலைப் பணி என்ற பெயரில் கற்களையும் மணலையும் கலந்து அப்படியே சாலையின் இரு புறமும் சாலையின் நடுவில் சேதமடைந்த இடங்களிலும் முறையான வகையில் இல்லாமல் ஏதோ பெயருக்கு போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் முன்பைவிட தற்போது விபத்து அதிகம் ஏற்படும் சூழல் உள்ளது. இருச்சர வாகனங்கள் சைக்கிளில் செல்பவர்கள் ஏன் நடந்து செல்பவர்களுக்கு கூட விழுந்து செல்லும் அளவிற்கு சாலையை மாற்றியமைத்துவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள், "யார் ஒப்பஒப்பந்ததாரர்களாக இருந்தாலும் ஒட்டுப் போட்டு சீரமைக்கிறோம் என்ற பெயரில் ஒழுங்கற்ற முறையில் சாலையை அலங்கோலப்படுத்தி ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றி வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார். எனவே இத்துறை தொடர்பான அதிகாரிகள் ஆய்வு செய்து மீண்டும் சரியான முறையில் சாலையினை சீரமைக்க வேண்டும் என்றும்  தேசிய சமூக நல அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை மாறுமா இல்லை வேலையே அவ்வளவுதானா என்பது சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்களிடம் அதிகாரிகளின் கையிலும்தான் உள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Feb 2, 2023 - 03:47:00 PM | Posted IP 162.1*****

நீங்க ஓட்டு போட்டது அவர் (அரசியல்வாதிகள்) குடும்பத்தினர் செழிப்புடன் வளரவே தான்

ganaFeb 1, 2023 - 04:19:29 PM | Posted IP 162.1*****

d m k aalunga than vera yaaru adutha murai vanthal seruppal adthiu viratungal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory