» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி: பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்!

திங்கள் 29, ஆகஸ்ட் 2022 4:50:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணினை இணைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை கடந்த 01.08.2022 முதல் துவங்கி உள்ளது. மேற்படி திட்டத்தின் நோக்கம் என்பது வாக்காளர் பட்டியலினை 100% தூய்மையாக்கல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது  பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படுகிறது.

இப்பணியானது 01.08.2022 முதல் தொடங்கி 31.03.2023 க்குள் முடித்திட இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விபரங்களை தெரிவிப்பது என்பது முழுவதும் வாக்காளர்கள் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis) செய்கின்ற அல்லது நிர்பந்தப்படுத்தாத தன்னார்வமான செயல் ஆகும். ஆதார் எண் விபரங்களை வாக்காளரிடமிருந்து பெறவும் ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கவும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டபூர்வமான அதிகாரியாக நியமித்;து இந்திய தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இத்திட்டத்தின்படி இணைய வழிமுறையில் (Online) வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம்-6B ஐ https://www.nvsp.in மற்றும் https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், Voters Helpline என்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட வழிமுறைகளின்படி இணைய வழியில் விண்ணப்பிக்கும் முதல் 1000 நபர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் இ-சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 

இச்சான்றினை பெற இணையவழியில் ஆதார் எண்ணை இணைத்த பின்னர் தங்களது அலைபேசி  எண்ணிற்கு வரும் குறியீட்டு எண்ணை தனியாக குறித்து வைத்துக்கொண்டு பின்னர் http://elections.tn.gov.in/getcertificateஎன்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களது மொபைல் எண்ணையும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (ஓ.டி.பி) எண்ணையும் உள்ளீடு செய்து இ-சான்றினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

எனவே தூத்துக்குடி மாவட்ட வாக்காளர்கள் இணையவழியில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாக்காளர்கள் இணையமற்ற வழிமுறையின்படி (Off Line) வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் படிவம்-6டீ ல் தெரிவித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக்கொள்ளலாம்.

மேலும் இப்பணிக்காக சிறப்பு முகாம் எதிர் வரும் 04.09.2022 ஞாயிற்று கிழமை அன்று நடத்தப்படவுள்ளது. இச்சிறப்பு முகாம் நாளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் படிவம்-6B யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இப்பணிக்காக மேலும் பல சிறப்பு முகாம்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளது. அச்சிறப்பு முகாம் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தினை பொருத்தவரையில் இத்திட்டம் தொடங்கப்பட்ட 01.08.2022 முதல் 28.08.2022 வரை தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களான 14,63,890 வாக்காளர்களில் 3,70,211 வாக்காளர்கள் அதாவது மொத்த வாக்காளர்களில் 25.29 சதவிகிதம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புறம் பகுதிகளை விட கிராமபுற பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவு தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். 

நகர்ப்புற பகுதிகளில் போதிய இணைதள வசதிகள் இருந்தும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து பதிவேற்றம் செய்வது குறைவாக உள்ளதால் வாக்காளர்கள் தாங்களே தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் மேற்கண்ட இணையதளம் மற்றும் அலைபேசி வாயிலாகவும் இணைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ஒத்துழைப்பினை நல்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதால் ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் மட்டுமே இடம்பெறும். 

ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருந்தால் அவர் விரும்பும் இடம் தவிர்த்து பிற இட வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். இப்பணி 31.03.2023 க்குள் முடித்திட உத்திரவிட்டுள்ளதால் வாக்காளர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கிடுமாறு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory